மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
4 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
4 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
4 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
4 hour(s) ago
ஊட்டி:ஊட்டி-தொட்டபெட்டா சாலையில், வார இறுதி நாட்களில் தொடரும் போக்குவரத்து
நெரிசலுக்கு தீர்வு காணப்படாததால், உள்ளூர் மக்கள்; அரசு, தனியார் நிறுவன
ஊழியர்கள் காலை; மாலை நேரங்களில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சமவெளி பகுதியில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. அதனை ஒப்பிடுகையில், நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது. இதனால், சமவெளி பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு சில நாட்களாவது வெயிலில் இருந்து தப்பிக்க, நீலகிரிக்கு படை எடுத்து வருகின்றனர். சுற்றுலா மையங்கள் முற்றுகை
இங்குள்ள, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்தின் அழகை காண தவறுவதில்லை. இந்நிலையில், வார விடுமுறை நாளான சனி, ஞாயிறு நாட்களில், கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் உட்பட, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு, 5 முதல் 10 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தொட்டபெட்டாவில் தொடரும் நெரிசல்
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் சுற்றுலா மையங்களை பார்வையிட்டு, தொட்டபெட்டா சிகரத்தை பார்வையிட திரளாக செல்கின்றனர். மலை பகுதியில் உள்ள குறுகிய சாலையில் செல்லும் போது, வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா வாகனங்கள் சாலையின் இருப்புறங்களிலும் அணிவகுத்து நின்றன. கோத்தகிரி மற்றும் கெந்தொரை சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் உட்பட தனியார் வாகனங்கள் ஊட்டிக்கு சரியான நேரத்துக்கு வரமுடியாமல் ஆங்காங்கே நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பொதுவாக, தொட்டபெட்டா பகுதியில் இருந்து, 10 நிமிடத்தில் சேரிங்கிராசை அடையும் வாகனங்கள், வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகே வந்தடையும் கட்டாயம் தொடர்கிறது.அப்பகுதியில் சில போலீசார் மட்டுமே பணியில் உள்ளதால், வாகனங்களை ஒழுங்குப்படுத்த திணற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.ஊட்டியில் பணிக்கு வரும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கூறுகையில்,''ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில், கிராமங்களில் இருந்து காலை இரண்டு மணிநேரத்துக்கு முன்பாக வந்தால் தான், 10:00 மணிக்கு பணியில் ஆஜராக முடியும். தனியார் நிறுவனங்களில் பணி செய்வோர், குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்லவில்லை எனில், அவர்களின் சம்பளம் பிடிக்கபடுகிறது.இதனால், வார இறுதி நாட்களில் இப்பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago