உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி: மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி: மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

ஊட்டி:லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.,வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி. என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். -ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு, முதல் முறையாக மத்திய இணை அமைச்சர் முருகன் ஊட்டிக்கு வருகை தந்தார். அவருக்கு, பா.ஜ., கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து, காப்பி ஹவுஸ் சந்திப்பு வரை கட்சியினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், பா.ஜ., பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் ஆதரவு பெருகி வருகிறது. தமிழக மக்கள் வளர்ச்சி பாதையை விரும்புகின்றனர். பிரதமருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தி.மு.க.,வில் முக்கியமான நிர்வாகியை நீக்கி உள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி எம்.பி., ராஜா, 2ஜி ஊழலில் சிக்கி தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில், 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இங்குள்ள அமைச்சர் தனது ரிசார்ட்டிற்கு சாலை அமைக்கிறார். ஊட்டி நகர் மன்றத்தில் வெளிப்படையாக லஞ்சம் வாங்கப்படுவதாக, தி.மு.க., கவுன்சிலரே கூறுகிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது.நடிகர் விஜய் ஆதரவு குறித்து, பா..ஜ., மேலிடம் என்ன கட்டளையிடுகிறதோ அதை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை. விஜய் அரசியல் கட்சி துவக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. கமலஹாசன் சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.,வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி.இவ்வாறு கூறினார்.பா.ஜ., நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் குமரன் முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை