மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
3 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
4 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
5 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
5 hour(s) ago
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, அமைந்துள்ள டேவிஸ் பூங்கா, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.ஊட்டி நகராட்சியில், முதல் கமிஷனர் பெயரில், கலெக்டர் அலுவலகம் அருகே டேவிஸ் பூங்கா அமைந்துள்ளது. சமீபத்தில், இப்பூங்காவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதுகாப்பு தடுப்புச்சுவர், நடைபாதை குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன.புனரமைக்கப்பட்ட பூங்காவை நான்கு மாதங்களுக்கு முன்பு, நீலகிரி எம்.பி., ராஜா, பூங்காவை திறந்து வைத்தார். இருப்பினும், பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் பூக்கள் பூக்காமலும், நடைபாதைகளில் புற்கள் வளர்ந்தும் பூங்காவுக்கான அடையாளமே இல்லாமல் காட்சி அளிக்கிறது.பூங்காவின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில், தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், இங்கு வந்து ஏமாற்றம் அடைகின்றனர்.எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளிக்க ஏதுவாக பூங்காவை புனரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago