மேலும் செய்திகள்
மா.கம்யூ., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை
2 minutes ago
வீட்டிலேயே நகைகளை வைத்து திருட்டு போனதாக புகார்
3 minutes ago
ஊட்டியில் கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி
4 minutes ago
குன்னுார்: அருவங்காட்டில் ஆபத்தை உணராமல் காட்டெருமையின் அருகில் நின்று பலரும் 'வீடியோ' எடுத்து வருகின்றனர். குன்னுார் - ஊட்டி சாலை அருவங்காடு பகுதியில் அவ்வப்போது காட்டெருமைகள் சாலையில் உலா வருகின்றன. அதில், ஒற்றை காட்டெருமை தினமும். இந்த பகுதிகளில் புற்களை மேய்ந்தவாறு சாலையை கடந்து செல்கிறது. இதனை பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். இதில் சிலர், காட்டெருமை தாக்கும் ஆபத்தை அறியாமல் அருகில் சென்று 'செல்பி' எடுப்பது அதிகரித்து வருகிறது. வன விலங்குகள் அருகே சென்று செல்பி எடுக்கும் நபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும், இந்த நிலை நீடித்து வருவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago