உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நள்ளிரவில் வீடியோ பதிவு செய்தவர்களை விரட்டிய காட்டு யானை

 நள்ளிரவில் வீடியோ பதிவு செய்தவர்களை விரட்டிய காட்டு யானை

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே நள்ளிரவு 'வீடியோ' எடுத்தவர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலுார் தேவர்சோலை அருகே உள்ள, பஞ்சாயத்து காலனி பகுதிக்கு, இரவு நேரங்களில் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கிறது. இந்நிலையில், காலனிக்கு செல்லும் சாலை பகுதிக்கு வந்த காட்டு யானை, ஒரு வீட்டின் முன் பகுதியை சேதப்படுத்தியது. அங்கிருந்த மூங்கில்களை உட்கொள்ள துவங்கியது. சிலர் யானை அருகே சென்று, அதனை 'வீடியோ' பதிவு செய்தனர். திடீரென காட்டு யானை, ஆக்ரோஷமாக அவர்களை விரட்டியது. அவர்கள் ஓடி உயிர் தப்பினர். வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். யானை தேவர்சோலை சாலையை கடந்து, மயானம் நுழைவு வாயில் கேட்டை உடைத்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு சென்றது. மக்கள் கூறுகையில், 'இரவில், குடியிருப்புக்குள் வரும் யானை, மக்களை தாக்கும் ஆபத்து உள்ளது முன்னெச்சரிக்கையாக இதனை தடுக்க வேண்டும்,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் இரவு நேரங்களில் யானை குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். காட்டு யானை தாக்கும் ஆபத்து உள்ளதால், பொதுமக்கள் அதன் அருகே சென்று 'வீடியோ' எடுப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை