உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் /  இன்ஸ்பெக்டர் மரணம் பணிச்சுமை காரணமா?

 இன்ஸ்பெக்டர் மரணம் பணிச்சுமை காரணமா?

பெரம்பலுார்: பெரம்பலுாரில், குற்ற புலனாய்வு துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், அலுவலகத்தில் பணியில் இருந்த போதே மாரடைப்பால் இறந்தார். அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன், 54. இவர், 2000ம் ஆண்டில் நேரடி எஸ்.ஐ.,யாக போலீஸ் பணியில் சேர்ந்தார். எட்டு ஆண்டுகளாக, பெரம்பலுார் விவேகானந்தா நகரில் உள்ள குற்ற புலனாய்வுத்துறை தனிப் பிரிவு அலுவலகத்தில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 6:45 மணியளவில், அலுவலகத்தில் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கினார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது திடீர் சாவுக்கு பணிச்சுமை அல்லது உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை