உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / நுகர்பொருள் கழக முடிவால் வீணாகும் அரிசி மூட்டைகள்

நுகர்பொருள் கழக முடிவால் வீணாகும் அரிசி மூட்டைகள்

புதுக்கோட்டை:பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி வழங்குவதற்கு, புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து, 42 ரயில் பெட்டிகளில், 52,000 கிலோ அரிசி மூட்டைகள் வந்துள்ளன. இவற்றை லாரிகள் வாயிலாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.தொடர்ந்து, ஒப்பந்ததாரர்களுக்கும், நுகர்பொருள் வாணிப கழகத்திற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால், அரிசி மூட்டைகளை கொண்டு செல்வதற்கு லாரிகள் வரவில்லை. தற்போது ரயில்வே நிர்வாகம், 42 ரயில் பெட்டிகளில் மற்றொரு பொருட்களை ஏற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதால், அரிசி மூட்டைகளை உடனடியாக இறக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஒப்பந்ததாரர் ரயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூட்டைகளை ரயில் நிலையத்திலேயே இறக்கி வைத்துள்ளனர்.அவற்றில், பல அரிசி மூட்டைகள் கிழிந்து விட்டதால், அரிசி ஆங்காங்கே கொட்டி கிடக்கிறது. தற்போது மழை பெய்தால், அரிசி மூட்டைகள் நனைந்து வீணாகி விடும். இதனால், தமிழக அரசிற்கு இழப்பு ஏற்படும். நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை