உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / காலாவதி பூச்சிக்கொல்லியால் கருகியது 7 ஏக்கர் நெற்பயிர்

காலாவதி பூச்சிக்கொல்லியால் கருகியது 7 ஏக்கர் நெற்பயிர்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் அருகே கிள்ளுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி இருதயராஜ், 51. அவர், 7 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ளார். தனியார் பூச்சி மருந்து கடையில் வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் வைத்து, 7 ஏக்கரிலும்தெளித்தார்.பூச்சி மருந்து அடித்த இரண்டு நாட்களில், நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகி விட்டன. அதிர்ச்சி அடைந்த விவசாயி இருதயராஜ் சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் கேட்டதற்கு, அவர் முறையாக பதில் அளிக்காமல் கடையையும் பூட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.அந்த பூச்சிக்கொல்லி மருந்தை சோதனை செய்த போது, அந்த மருந்து ஏற்கனவேகாலாவதியாகி இருந்தது தெரிந்தது.பாதிக்கப்பட்ட விவசாயி இருதயராஜ், அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'காலாவதியான பூச்சி மருந்தை தெளித்ததால் 7 ஏக்கர் நெற்பயிர் வீணாகி, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு தகுந்த இழப்பீடை அரசு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயி புகார் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை