மேலும் செய்திகள்
அடுத்தவர் மனைவியிடம் பேசியவருக்கு கத்திக்குத்து
06-Apr-2025
புதுக்கோட்டை: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 40. இவரது மனைவி அபிராமி, 38; ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக கவர்ச்சி விளம்பரங்களை அறிவித்திருந்தனர்.இதை நம்பிய, புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார், 45, அவரது சகோதரர் மகேஷ்குமார், 47, அவரது உறவினர்கள் உட்பட 23 பேர், 1 கோடியே 22 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர்.இதில், சுரேஷ்குமார் மட்டும், 59 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இந்த பணத்தில், 4 லட்சத்து 40,000 ரூபாய் மட்டும் திரும்ப கிடைத்த நிலையில், மீதமுள்ள 54 லட்சத்து 60,000 ரூபாய் பணத்தை தராமல், மணிகண்டன்-, அபிராமி தம்பதி ஏமாற்றினர். சுரேஷ்குமார் இதுகுறித்து அளித்த புகாரில், குற்றப்பிரிவு போலீசார், தம்பதியை சேலத்தில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் மீது பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
06-Apr-2025