உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

கமுதி: கமுதி அருகே பம்மனேந்தலை சேர்ந்தவர் நாகஜோதி 38. தலையாரி வேலை பார்க்கிறார். ஜூன் 30ல் கமுதியில் இருந்து பம்மனேந்தல் கிராமத்திற்கு கணவர் சோலைராஜுடன் டூவீலரில் நாகஜோதி சென்றார்.செந்தனேந்தல் அருகே இரண்டு பேர் டூவீலரை வழிமறித்து நாகஜோதி அணிந்திருந்த​ 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.கமுதி போலீசார் விசாரித்தனர்.இதையடுத்து மதுரை ஐராவதநல்லுார் செண்பகமூர்த்தி 22, சிவலிங்கபுரம் சவுந்தரராஜன் 21, ஆகிய 2 பேரை கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி