உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூட்டிய கடையில் கார் மோதி விபத்து

பூட்டிய கடையில் கார் மோதி விபத்து

முதுகுளத்துார் : முதுகுளத்துார் தனியார் பள்ளி அருகே பூட்டிய கடை மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.தென்காசியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் குடும்பத்துடன் பரமக்குடியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ஓட்டும் போது செந்தில்குமார் துாங்கியதால் முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு தனியார் பள்ளி அருகே பூட்டிய கடை மீது மோதியது.நேற்று முன்தினம் இரவு என்பதால் கடை பூட்டியிருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தடுப்புச்சுவர் மட்டும் சேதமடைந்துள்ளது. விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை