மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
பெரியபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.பெரிய பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா விமரிசையாக நடந்து வருகிறது.123ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜூன் 13 மாலையில் 70 அடி உயர கொடிக்கம்பத்தில் பச்சை வண்ண பிறை கொடி ஏற்றப்பட்டது.நாள்தோறும் மாலை வேளையில் உலக நன்மைக்கான மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துவங்கியது. 35 அடி உயர வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சுற்றி சுழலும் கூட்டினை சுமந்தவாறு பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் சந்தனக்கூடை சுமந்து வந்தனர்.அதன் அருகில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட மற்றொரு ரதத்தில் தென்னங்கன்றுகள் வைக்கப்பட்டிருந்தன. 10 நாட்டிய குதிரைகள் முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். நேர்த்திக்கடன் பக்தர்கள் மல்லிகை பூச்சரங்களை சந்தனக்கூட்டின் மீது துாவினர்.தர்காவை சுற்றி மூன்று முறை ரதங்கள் வலம் வந்தன. சீனியம்மாள், மகான் செய்யதலி, செய்யது அம்மாள் ஆகியோரின் புனித மக்பராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு வாசனை திரவியங்கள் தெளித்து மல்லிகை சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.பெரியபட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர். நேற்று மதியத்துடன் சந்தனக்கூடு நிறைவடைந்தது. நெய் சோறு மற்றும் பிரியாணி அனைவருக்கும் வழங்கப்பட்டது.ஜூலை 3 மாலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பெரியபட்டினம் தர்கா சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago