உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி கடற்கரையில் பூங்கா அமைக்க கோரிக்கை

தொண்டி கடற்கரையில் பூங்கா அமைக்க கோரிக்கை

தொண்டி : தொண்டி கடற்கரையில் பூங்கா அமைக்க மக்கள் வலியுறுத்தினர்.தொண்டி கடற்கரையில் அப்பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் அமர்ந்து பொழுது போக்குவார்கள். சிலர் நடைபயிற்சியில் ஈடுபடுவார்கள். அங்கு பூங்கா அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.நிதி ஒதுக்காததால் அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் இரவு நேரங்களில் சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்துகின்றனர். இதனால் கடற்கரைக்கு அதிகாலையில் செல்வோர் முகம் சுளிக்கின்றனர்.தொண்டி சிக்கந்தர் கூறுகையில், ஜெட்டி பாலத்திற்கு சென்று பொழுது போக்கினோம். பாலத்தில் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டதால் அங்கும் செல்ல முடியவில்லை. அழகப்பா கல்லுாரி கடற்கரைக்கு பணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் தினக்கூலி வேலை செய்பவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே கடற்கரையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொழுது போக்கு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி