உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதுமடத்தில் தொடக்கப் பள்ளிக்கு இடையூறு ஏற்படுத்தும் நிழற்குடை

புதுமடத்தில் தொடக்கப் பள்ளிக்கு இடையூறு ஏற்படுத்தும் நிழற்குடை

ரெகுநாதபுரம்: மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கடந்த ஆண்டு புதியதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.பஸ்சிற்காக வரக்கூடிய பயணிகள் அமருமிடம் பள்ளிக்கூடம் முகப்பு பகுதியில் உள்ளதால் அப்பகுதிக்கு வருபவரால் சிகரெட்டு புகைத்தல், மது அருந்துதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளால் பள்ளி நேரங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் புதுமடம் ஊராட்சி நிர்வாகி முகமது ஜாபர்கான் கூறியதாவது: புதுமடம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிக்கு இடையூறாக பயணிகள் நிழற்குடை முன்புறம் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே மேற்கு பக்கம் உரிய முறையில் தடுப்பு சுவரை ஏற்படுத்தவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ