உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகநுாலில் சர்ச்சை கருத்து கீழக்கரை வாலிபர் கைது

முகநுாலில் சர்ச்சை கருத்து கீழக்கரை வாலிபர் கைது

ராமநாதபுரம்: வெளி நாட்டில் இருந்து முகநுால் பக்கத்தில் சர்சசைக்குரிய கருத்துகளை பதிவு செய்த கீழக்கரை வாலிபர் ஊர் திரும்பிய போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதள பக்கங்களை 2021 மே மாதம் கண்காணித்து வந்தனர். அப்போது ஒருவரது முகநுால் பக்கத்தில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய பொது அமைதியை சீர்குலைக்கும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது குறித்து தொழில் நுட்ப பிரிவு எஸ்.ஐ., ரிச்சர்ட்சன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிந்து விசாரித்தனர்.அந்த நபர் கீழக்கரை தச்சர் தெருவை சேர்ந்த புக்கானுதீன் மகன் அல்தாப் அசேன் 27, என தெரிய வந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரியும் அவர் அங்கிருந்து முகநுாலில் கருத்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அல்தாப் அசேன் நாடு திரும்பிய போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் மும்பை சென்று அல்தாப் அசேனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ