உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருதாந்தை கண்மாயில் இருந்து எடுக்கப்பட்ட சிவனுக்கு கோயில்

மருதாந்தை கண்மாயில் இருந்து எடுக்கப்பட்ட சிவனுக்கு கோயில்

திருவாடானை: திருவாடானை அருகே மருதாந்தை கிராமத்தில் கண்மாயிலிருந்து கண்டெடுக்கபட்ட இரு சிவலிங்கத்திற்கு கபாலிஸ்வரர் கோயில் கட்டியுள்ளனர்.கடம்பூர் ஊராட்சி மருதாந்தை கிராமத்தில் கண்மாயிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிவலிங்கமும், திருவெற்றியூர் ஏந்தல் கண்மாய்க்கரையில் ஒரு சிவலிங்கம் 10 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கபட்டது. கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். திறந்த வெளியில் இருந்த அச்சிலைகளுக்கு கொட்டகை அமைத்து கோயிலில் வழிபாடு செய்யும் வகையில் கோவை உப்பிலிபாளையம் அரன்பணி அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். மருதாந்தை, திருவெற்றியூர் கிராம மக்கள் உதவியுடன் கோயில் கட்டபட்டது. அதனை தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி