உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா; இன்று கொடியேற்றம்

நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா; இன்று கொடியேற்றம்

நயினார்கோவில் : ஆடிப்பூர திருக்கல்யாண விழாவை முன்னிட்டு பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் இன்று கொடியேற்றம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. இன்று காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள் சவுந்தர்ய நாயகி அம்பாள் சன்னதி முன்பு கோயில் கொடிமரத்தில் சிங்க கொடி ஏற்றப்படும்.பின்னர் இரவு இந்திர விமானத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார். இதே போல் தினமும் காலை மற்றும் இரவு வெள்ளி பல்லக்கு, அன்ன வாகனம், சிம்மம், கமல வாகனம், ரிஷபம், கிளி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஆக., 9 அன்று காலை 9:00 மணிக்கு நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.ஏற்பாடுகளை சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !