உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் ஏ.சி.,பழுது: சுற்றுலா பயணிகள் அவதி

அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் ஏ.சி.,பழுது: சுற்றுலா பயணிகள் அவதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் ஏ.சி., மின்விசிறி பழுதாகியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதிதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டு 2017 ஜூலை 27 முதல் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இந்த நினைவகத்தை டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பராமரித்து வருகிறது.இந்நிலையில் இங்குள்ள ஏ.சி., மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர். கடந்த சில மாதங்களாக அப்துல் கலாம் சமாதி, அவரது மெழுகு சிலைகள் உள்ள அறையில் சீலிங் சென்டர்லைஸ்டு ஏ.சி., இயந்திரங்கள், மின்விசிறிகள் பழுதாகியுள்ளது.இதனால் நினைவகத்திற்குள் வெப்ப சலனத்தால் சுற்றுலாப் பயணிகள் கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படம், மெழுகு சிலைகளை கண்டு ரசிக்க முடியாமல் வியர்வையுடன் விரைவில் வெளியேறுகின்றனர்.பழுதான ஏ.சி., இயந்திரம், மின்விசிறிகளை சரி செய்ய சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியும் பலனில்லை. எனவே பழுதாகிய மின்சாதன பொருட்களை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்