உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதி பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

ஆதி பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

கீழக்கரை: -கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டாலை மேலக்கரையில் உள்ள ஆதி பெரியாண்டவர், அப்பாண்டவர் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பாலிகா பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகளும் கோயிலை சுற்றி பட்டாச்சாரியார்களின் கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:50 மணிக்கு கோயில் விமான கலசத்தில் பார்த்திபன் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.மூலவர்கள் செல்வகணபதி, பாலமுருகன், பெரியாண்டவர், அப்பாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் விழா கமிட்டி செயலாளர் ஆசிரியர் (ஓய்வு) எஸ்.ராமலிங்கம், தொண்டாலை மேலக்கரை கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ