உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூங்கா அருகில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு

பூங்கா அருகில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்த வளர்ந்துள்ளதால் பொழுது போக்குவதற்கு வரக்கூடிய பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: ரூ.10 லட்சத்தில் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் தெற்கு பகுதியில் அடந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்