உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஆடிப்பெருக்கு அமாவாசை வழிபாடு

பரமக்குடியில் ஆடிப்பெருக்கு அமாவாசை வழிபாடு

பரமக்குடி : பரமக்குடியில் ஆடிப்பெருக்கு விழா மற்றும் அமாவாசை வழிபாடு அனைத்து கோயில்களிலும் நடந்தது.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆறு படித்துறையில் தீப வழிபாடு நடந்தது. அப்போது இரவு 7:00 மணி வரை சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டு புஷ்பாஞ்சலி மற்றும் தீப ஆராத்தி விழா நடந்தது.பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் ஆடி அமாவாசையை ஒட்டி ரத வீதிகளில் வலம் வந்தார்.பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேற்று முன்தினம் மாலை அபிஷேக பூஜைகள் நடந்தன. பரமக்குடி காக்கா தோப்பு 18ம் படி கருப்பணசுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து 18 படிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஞான யோகானந்த ஆசிரமத்தில் சிவலிங்கத்திற்கு மகா அபிஷேகம் தீபாரதனை நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ