| ADDED : ஜூன் 19, 2024 04:44 AM
உச்சிபுளி, : ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியமான் கடற்கரை திருவிழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.ராமநாதபுரம் அருகே அரியமானில் கடற்கரை திருவிழா ஜூன் 15 முதல் 17 வரை நடந்தது. நேற்று முன்தினம் நிறைவு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ், மன்னார் வளைகுடா வன உயிரின காப்பகம் வார்டன் பகான் ஜக்தீஸ் சுதாகர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கூறியதாவது: கடற்கரை திருவிழாவில் கைப்பந்து, கால்பந்து போட்டிகள், படகு சவாரி, மாணவர்களின் பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்று நாட்களிலும் 1 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர் என்றார்.விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் பரிசு, ரூ.7000 இரண்டாம் பரிசு, ரூ.5000 மூன்றாம் பரிசு, இவற்றுடன் கேடயம், கோப்பையை கலெக்டர் வழங்கினார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி, மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.