உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் கலை இரவு விழா

ராமேஸ்வரத்தில் கலை இரவு விழா

ராமேஸ்வரம் : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் கலை இரவு விழா நடந்தது.ராமேஸ்வரம் பொந்தப்புளியில் ராமேஸ்வரம் கிளை த.மு.எ.ச., சார்பில் புதுகை பூபாலம் கலைக்குழு, திண்டுக்கல் சக்தி பறை கலைக்குழு, ராமநாதபுரம் கலைக் குழுவினரின் பாரம்பரிய கலை நடனம், தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட எழுத்தாளர்கள் பாலபாரதி, நஜீமா மரைக்காயர், கலையரசன், மோகனபிரியா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து 'என்னமோ நடக்குது,' எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு,' என்ற தலைப்பில் பேச்சாளர்கள் நந்தலாலா, லட்சுமண பெருமாள் பேசினர்.த.மு.எ.ச., ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வான்தமிழ், ராமேஸ்வரம் கிளை தலைவர் ராமச்சந்திர பாபு, செயலாளர் மோகன், ம.தி.மு.க., இளைஞரணி துணை செயலாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் சிவா, கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை