மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கியது.மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்( ஜூலை 19) நாளை நடக்கிறது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.முன்னதாக கிராமத் தலைவர் ராஜதுரை தலைமையில் கிராமத்தினர் கோயிலை வலம் வந்து யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். பின் இரவு 8:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது.மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோ பூஜையுடன் காலை 9:45 முதல் 11:15 மணிக்குள் கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை மோர்ப்பண்ணை கிராம மீனவ பட்டங்கட்டியர்கள் செய்து வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago