உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் பால்குடம் காவடி எடுத்து ஊர்வலம்

முதுகுளத்துாரில் பால்குடம் காவடி எடுத்து ஊர்வலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அபிஷேகம் பூஜைகள் நடந்தது. முதுகுளத்துார் காந்தி சிலை அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் உட்பட முக்கிய வீதிகள் வழியாக வழிவிடு முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காவடியுடன் ஊர்வலமாக சென்றனர். பின் முருகனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் முடிந்தவுடன் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழு தலைவர் அழகு சரவணன், குருநாதர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முதுகுளத்துார்--பரமக்குடி சாலை விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய விதிகள் வழியாக தாலுகா அலுவலகம் அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் அக்ரஹாரம் தெருவில் முருகன் ஊர்வலமாக வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை