உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் நாளை முதல் ஆக.18 வரை புத்தகத் திருவிழா

பரமக்குடியில் நாளை முதல் ஆக.18 வரை புத்தகத் திருவிழா

பரமக்குடி: -பரமக்குடியில் மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 2-வது ஆண்டு, நம்ம ஊரு புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.பரமக்குடி சந்தை திடலில் உள்ள டி.டி.எஸ்., மஹாலில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. இங்கு ஒவ்வொரு புத்தகங்களுக்கும் 10 சதவீதம் முதல் விலைகளில் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து பொதுமக்களும் இலவசமாக பங்கேற்கலாம். கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் புத்தக கண்காட்சியை நாளை (ஆக.9) துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ஆக.18 வரை 10 நாட்கள் நடக்க உள்ள நிகழ்வில் நகைச்சுவை நடிகர்களின் காமெடி ஷோ, கிராமிய கச்சேரி, நாஞ்சில் சம்பத், புதுகை பூபாளம், ஆதவன், பாரதி கிருஷ்ணகுமார், சீனு ராமசாமி, மதுக்கூர் ராமலிங்கம், புதுக்கோட்டை பாவாணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நுாலக தலைவர் சந்தியாகு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி, விழா வரவேற்புக் குழு தலைவர் சேகர், செயலாளர் பசுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை