உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி மீது வழக்கு

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு ஏர்வாடியை சேர்ந்த 18 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அவரது பெற்றோர் கட்டணம் செலுத்தி சேர்த்துள்ளனர். இவரை பார்க்க பெற்றோர் அப்பள்ளிக்கு சென்றனர். அப்போது, சிறுமி பள்ளி நிர்வாகி தசரத பூபதி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கதறி அழுதார். புகாரில் தசரத பூபதி மீது போக்சோ சட்டத்தில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ