உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனையோலை பொருட்கள் தயாரிக்கும் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

பனையோலை பொருட்கள் தயாரிக்கும் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் உள்ள சமுதாய கூடத்தில் சி.எம்.எஸ்., பவுண்டேஷன் மற்றும் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பனையோலையில் கலைநயமிக்க கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது.இதில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஓ.என்.ஜி.சி., ரிக் மேனேஜர் தங்கமணி முன்னிலை வகித்தார். வாப்ஸ் தொண்டு நிறுவன தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆசை தம்பி வரவேற்றார். செயலாளர் அருள், சி.எம்.எஸ். சிஸ்டம்ஸ் மதுரை கிளை மேலாளர் வேல்முருகன் பங்கேற்றனர்.பல்வேறு கலைநய பொருள்களை காட்சிக்கு வைத்திருந்தனர். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து மகளிர்களுக்கு ஆலோசனை மற்றும் வங்கி கடனுதவி பற்றி விளக்கமளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி