உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டினத்தில் கிடைத்த வட்ட வடிவ கல் நங்கூரம்

பெரியபட்டினத்தில் கிடைத்த வட்ட வடிவ கல் நங்கூரம்

பெரியபட்டினம்: பெரியபட்டினம் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் கப்பலாறு அமைந்துள்ளது. கப்பலாறு பகுதியில் இருந்த கல் நங்கூரத்தை அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் ஹாத்திம் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கடல் பாறையால் ஆன மூன்று அடி உயரத்தில் ஒன்றரை அடி அகலத்தில் நடுவில் துளையிடப்பட்டு காணப்பட்டது. ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் ஹாத்திம், அபிஷேக் ஆகியோர் கூறியதாவது:கி.பி., இரண்டாம் நுாற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இவ்வகை கல் நங்கூரங்கள் கிரேக்க மாலுமி குறிப்பிட்ட 2000 ஆண்டு பழமையான பாண்டிய நாட்டின் பெரிமுடா என்ற நகரத்தை பற்றி ஆய்வு செய்ய உதவும்.பெரியபட்டினம் நகரம் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நகரமாக முன்னொரு காலத்தில் விளங்கியுள்ளது. அப்போது பயன்படுத்தப்பட்ட கல் நங்கூரம் தற்போது காலப்போக்கில் வெளியே வருகிறது.பெரியபட்டினம் பகுதியில் பழமை வாய்ந்த பொருட்களின் எச்சங்கள் நிறைய உள்ளன. சமீபத்தில் ஹிப்ரு மொழி பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டு ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் தொல்லியல் அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.எனவே தொல்லியல் துறையினர் உரிய முறையில் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல்வேறு தகவல்கள் காணக் கிடைக்கலாம் என்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி