உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மினி பஸ் டயரில் சிக்கி கல்லுாரி மாணவன் பலி

மினி பஸ் டயரில் சிக்கி கல்லுாரி மாணவன் பலி

பரமக்குடி:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மினி பஸ் சக்கரத்தில் சிக்கி ஹெல்மெட் அணிந்து டூவீலரில் சென்ற கல்லுாரி மாணவன் தலை நசுங்கி பலியானார்.வெங்கிட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் மகன் ஆனந்த பிரபாகரன் 18. கருமாத்துார் தனியார் கேட்டரிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். நேற்று மதியம் 3:20 மணிக்கு வெங்கிட்டான் குறிச்சியில் இருந்து தாத்தா திரவியத்தை பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து செல்வதற்காக டூவீலரில் வந்துள்ளார்.தீயணைப்பு நிலையம் எதிரில் பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்ற மினி பஸ் மோதியதில் ஹெல்மெட் அணிந்த நிலையிலும் ஆனந்த பிரபாகரன் நிலை தடுமாறி பின் சக்கரத்தில் தலை சிக்கி பலியானார். மினி பஸ் டிரைவர் கார்த்திக்கை 41, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி