உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை  கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு 

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை  கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு 

ராமநாதபுரம் : தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல், மத்திய அரசின் 3 குற்றவியல் புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரியும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும் ஆக.19 லும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மதுரை, மேலுார், கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் வழக்கறிஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நீமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஆக. 19லும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ