உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 17 ) காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்ய உள்ளார்.இதற்காக நேற்றிரவு 8:00 மணிக்கு ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்திற்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவருக்கு மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.இன்று காலை 10:00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்கிறார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு காஞ்சி மடத்தில் அவர் ஓய்வெடுக்கிறார். மாலை 5:00 மணிக்கு காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி