உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சவுதி அரேபியா நாட்டு சிறையில் வாடும் ராமநாதபுரம் மீனவரை மீட்க கோரிக்கை

சவுதி அரேபியா நாட்டு சிறையில் வாடும் ராமநாதபுரம் மீனவரை மீட்க கோரிக்கை

ராமநாதபுரம், : சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்று போதை வழக்கில் சிக்கியுள்ள ராமநாதபுரம் மீனவர் சமயகாந்த்தை 34, மீட்டுத்தர மத்திய, மாநில அரசு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.திருப்பாலைக்குடி அருகே முள்ளிமுனையைச் சேர்ந்த சமயகாந்த் மனைவி நந்தினி, அவரது குழந்தைகள், உறவினர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் சமயகாந்த் சவுதி அரபியா நாட்டில் தம்மாம் ஜுபைல் என்ற இடத்தில் 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சமயகாந்தைகைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர். சிறையில் உள்ள சமயகாந்திடம் போனில் பேசிய போது அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்கிறார். எனவே அவரை மீட்டுத்தர இந்திய துாதரகம், மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை