உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மதுவிலக்கை அமல்படுத்த ஆர்ப்பாட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த ஆர்ப்பாட்டம்

பரமக்குடி: ராமநாதபுரம் மேற்கு மாவட்ட ம.ம.க., சார்பில் பரமக்குடி காந்தி சிலை முன்பு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார். மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹிம், தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முகம்மது இலியாஸ் வரவேற்றார்.பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கடந்த கால அவலங்களை களைய திராவிட மாடல் சமூக நீதி அரசின் முதன்மையான கடமை என உணர்ந்து அனைத்து மதுக்கடைகளையும் அரசு மூட வேண்டும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு என கூறியதை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். த.மு.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாகான், சமூக நீதி பணியாளர் தாஹாபுஹாரி, தலைமை பிரதிநிதிகள் ஜைனுல் ஆபிதீன், ஹுசைன் கனி, சம்சுதீன் சேட், காங்., நிர்வாகி அப்துல் அஜீஸ் உட்பட பலர் பேசினர். பரமக்குடி நகர் தலைவர் முகம்மது சுஜித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை