உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பச்சனத்திக்கோட்டை காலனிக்கு ஒரு மாதமாக குடிநீர் சப்ளை கட்

பச்சனத்திக்கோட்டை காலனிக்கு ஒரு மாதமாக குடிநீர் சப்ளை கட்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் ஊராட்சி பச்சனத்திக்கோட்டை ஆதிதிராவிடர் காலனிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லாததால் அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.பச்சனத்திக்கோட்டை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள ஆதி திராவிடர் காலனி பகுதிக்கு ஒரு மாதத்திற்கும் மேலாகவும், மற்ற பகுதிகளுக்கு 15 நாட்களுக்கும் மேலாகவும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பச்சனத்திக்கோட்டை பகுதி மக்கள் பாதுகாப்பற்ற தண்ணீரை குடம் ரூ.12 வரை கொடுத்து வாங்கும் நிலையில் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.மேலும் முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய வழக்கில் ஊராட்சி செயலாளர் செய்யது அப்தாகிர் தலைமறைவாக உள்ளதால் ஊராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய ஊராட்சி செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ