உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் பட்டியல் பணிகள் துவக்கம்

வாக்காளர் பட்டியல் பணிகள் துவக்கம்

திருவாடானை : திருவாடானை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை 2025 ஜன.,க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளதால் திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. திருவாடானை தாலுகா தேர்தல் துணை தாசில்தார் இந்திரஜித் கூறியதாவது:தொகுதியில் 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களுக்கு அந்தந்த ஓட்டுப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். வாக்களர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும். மற்றும் இரண்டு பதிவு உள்ள வாக்காளர் பெயர்களில் தவறானது நீக்கப்படும்.மேலும் கிராமங்களில் வீடு தோறும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முகாம் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்