உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தென்னையை தாக்கும் வெள்ளைப் பூச்சிகள் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை

தென்னையை தாக்கும் வெள்ளைப் பூச்சிகள் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை

ரெகுநாதபுரம், : திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு பகுதியில் அமைந்த கிராமங்களான ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், வண்ணாங்குண்டு, நைனாமரைக்கான், கொல்லன்தோப்பு, பத்திராதரவை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தென்னை மரத்தில் வெள்ளை பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் அதிக பாதிப்பை சந்திக்கின்றனர். வெள்ளை பூச்சிகள் தென்னை மரத்தில் இளநீர் மற்றும் தேங்காய்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. தென்னை ஓலைகள் விரைவிலேயே பட்டுவிடுகிறது. இதனால் தென்னையில் நோய் தாக்குதலை மரங்கள் சந்திக்கின்றன. எனவே உரிய நிவாரணங்கள் வழங்கவும் வேளாண் துறையினர் உரிய ஆலோசனை வழிகாட்டுதலை நெறிமுறைப்படுத்தவும் வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ரெகுநாதபுரம் மேலுார் விவசாயி ஜெகநாதன் கூறியதாவது:இப்பகுதியில் விளைவிக்கப்படும் தேங்காய்கள்காங்கேயம், வெள்ளக்கோயில், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.ஆண்டிற்கு ஆறு முறை தேங்காய் (தேங்காய் ஓட்டுடன் கூடியது)கிலோ ரூ. 25 முதல் ரூ. 27 வரை விற்பனை செய்யப்படுகிறது. தென்னையில் வெள்ளை பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உரிய ஆலோசனையை வேளாண் துறை வழங்க வேண்டும்.இதனால் விவசாயிகள்அதிக பாதிப்பை சந்திக்கின்றனர். உழைப்பு அதிகம். லாபம் குறைவு என்ற ரீதியில் உள்ளது. ஒரு தேங்காய் உரிப்பதற்கு கூலி, போக்குவரத்துச் செலவு கணக்கு பார்த்தால் குறைவான லாபமே வியாபாரிகளுக்கு கிடைக்கிறது. ஓடு அகற்றப்பட்ட கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 85க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக தேங்காய் சார்ந்த பொருட்களானதென்னை மட்டை உள்ளிட்டவைகள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியின்றி முடங்கியுள்ளன. தென்னை மர தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளின் நலன் காக்கவும் தேங்காய்க்கு உரிய கொள்முதல் விலையை நிர்ணயம்செய்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் குறைகளை தீர்க்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை