உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். கிராம தலைவர் பாலசுப்பிரமணியன்,தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் அங்குதன் வரவேற்றார். முதுகுளத்துார் வட்டாரத்தில் பருவமழை காலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விரைவில் நிவாரணம் வழங்க கோரி கோஷமிட்டனர். தாலுகா பொருளாளர் முருகேசன், விவசாயிகள் பங்கேற்றனர். இதேபோல் கீழக்கன்னிசேரி கிராமத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ