உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இயற்கை உரத்திற்காக கிடை அமைக்கும் விவசாயிகள்

இயற்கை உரத்திற்காக கிடை அமைக்கும் விவசாயிகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் இயற்கை உரத்திற்காக விவசாயிகள் ஆட்டுகிடை அமைத்து வருகின்றனர்.முதுகுளத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். அதற்கு பின் ஒருசில விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் மிளகாய்,பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு பருவமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி வீணாகியது.விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலத்தை உழவு செய்து தரிசாக விட்டுள்ளனர். முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாய நிலத்தின் இயற்கை உரத்திற்காக வெளி மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்காக கொண்டுவரப்படும் ஆடுகளை தங்களது நிலத்தில் கிடை அமைத்து இயற்கை உரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர்​ விவசாய நிலங்களில் கிடை அமைத்து வருவது அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை