உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாய நிலங்களில் உப்பளத்தால் பாதிப்பு விவசாயிகள் வேதனை

விவசாய நிலங்களில் உப்பளத்தால் பாதிப்பு விவசாயிகள் வேதனை

சாயல்குடி: சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையை ஒட்டிய கன்னிகாபுரி பகுதியில் 5000 பேருக்கும் மேல் வசிக்கின்றனர். மூக்கையூர் வடக்கு, மூக்கையூர், குதிரை மொழி, இலந்தைகுளம் மற்றும் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் பரந்து விரிந்துள்ளன.இந்நிலையில் அப்பகுதியில் அமைக்கப்படவுள்ள உப்பளத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கன்னிகாபுரியைச் சேர்ந்த தன்னார்வலர் சரவணகுமார் கூறியதாவது:வானம் பார்த்த பூமியாக உள்ள இப்பகுதியில் பிரதானமாக விவசாயம் மற்றும் பனைத் தொழில், மீன்பிடி உள்ளிட்ட தொழில்கள் நடக்கிறது. சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரமாக நிலத்தடி நீர் இருந்து வரும் நிலையில் இடைத்தரகர்களின் மூலமாக ஏராளமான நிலங்களை ஒன்றிணைத்து 300 ஏக்கருக்கும் அதிக இடங்களில் உப்பளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பகுதியில் உப்பளம் அமைக்கப்படும் பட்சத்தில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படும் விவசாயம் மற்றும் பனை சார்ந்த உற்பத்தி பொருள்கள் நலிவடையும். எனவே உப்பளம் அமைக்க வேண்டாம் எனக் கூறி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.ஏராளமான இடைத்தரகர்கள் இப்பகுதியில் முகாமிட்டு உப்பளம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் எங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை