உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் மீது கார் மோதி மீனவர் பலி இருவர் காயம்

டூவீலர் மீது கார் மோதி மீனவர் பலி இருவர் காயம்

சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.சாயல்குடி-நரிப்பையூர் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தெற்கு நரிப்பையூரை சேர்ந்த மீனவர்களான ரகுமான் 50, சாகுல் 45, நாசர் 47, மூவரும் ஒரே டூவீலரில் மீன்பிடி தொழிலுக்காக மூக்கையூர் துறைமுகம் நோக்கி சென்றனர்.அப்போது கோவில்பட்டியில் இருந்து காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சென்றனர். இவர்களின் கார் முன்னால் சென்ற டூவீலரில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த ரகுமானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காயமடைந்த மற்ற இரு மீனவர்களையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சாயல்குடி இன்ஸ்பெக்டர் முகமது இர்ஷாத் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை