உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன் வியாபாரிகள் சிண்டிகேட் கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக்

மீன் வியாபாரிகள் சிண்டிகேட் கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் மீன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.ராமேஸ்வரத்தில் 650 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூலை 14 முதல் மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் இறால், நண்டு, கணவாய், காரல், சங்காயம் உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கின. ஆனால் மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து 20 முதல் 30 சதவீதம் விலை குறைத்து வாங்கினர். மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்கச்செய்ய வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை