உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பங்கு சந்தை லாபம் என மோசடி வடமாநில கணக்கு முடக்கம்

பங்கு சந்தை லாபம் என மோசடி வடமாநில கணக்கு முடக்கம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பெண்ணிடம் பங்குசந்தையில் லாபம் ஈட்டலாம் என 33 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த வடமாநில கும்பலின் வங்கி கணக்கினை ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.கீழக்கரையை சேர்ந்தவர் மெகர்பானு 45, இவரது வாட்ஸ் ஆப் ல் வீட்டில் இருந்தே பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற இணைப்பில் சென்று ஆன் லைன் செயலியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். அந்த குழுவில் பங்கு சந்தையில் நாள் தோறும் அதிக லாபத்துடன் இயங்கும் நிறுவனங்களில் பணம் கட்டி சந்தையில் அதிக மதிப்பு ஏற்படும் போது விற்று லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன் படி மெகர்பானு பல்வேறு தவணைகளில் 33 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பங்கு சந்தையில் முதலீடு செய்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வரை லாபமாக சேர்ந்துள்ளது. இந்த பணத்தை எடுக்க முயன்றபோது மேலும், மேலும் பணம் கட்டினால் மட்டுமே எடுக்க முடியும், என தெரிவித்துள்ளனர். பணத்தை திருப்பி தராமல் பணம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மெகர்பானு இணையதளத்தில் தேடிப்பார்த்த போது மோசடி என்பது தெரியவந்தது. மெகர்பானு சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் பங்கு சந்தை மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டனர். மெகர்பானு அளித்த வங்கி கணக்குகள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவது தெரியவந்தது.மோசடி நபர்களின் வங்கி கணக்கினை முடக்கி அதிலிருக்கும் 17 லட்சத்து 69 ஆயிரத்து 284 ரூபாயை முடக்கியுள்ளனர். தொடர்ந்து மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ