உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோவிலில் மாலை மாற்றுதல் விழா

ராமேஸ்வரம் கோவிலில் மாலை மாற்றுதல் விழா

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் ஜூலை 29ல் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது. நேற்று 11ம் நாள் திருவிழாவையொட்டி, கோவிலில் இருந்து காலை 6:30 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மனும், காலை 11:30 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பிரியாவிடை அம்மனும் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினர். மதியம் 3:20 மணிக்கு தபசு மண்டகப்படி முன், சுவாமி, அம்மனுக்கு மாலைமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின், சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7:40 மணிக்கு அனுமன் சன்னதியில் சுவாமி, அம்மனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இரவு சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை