உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துர்க்கை அம்மன் விளக்கு பூஜை

துர்க்கை அம்மன் விளக்கு பூஜை

கமுதி: கமுதி அருகே அபிராமம் சாந்த கணபதி கோயில் வளாகத்தில் உள்ள சுயம்புலிங்க துர்க்கை அம்மனுக்கு 34ம் ஆண்டு ஆடி கொடை விழா ஆக.10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான 508 விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிராமம் முக்கிய வீதிகளில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. கமுதி சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !