உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு டவுன் பஸ் தாமதமாக இயக்கம்  பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி 

அரசு டவுன் பஸ் தாமதமாக இயக்கம்  பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரையில் இருந்து பனைக்குளம் செல்லும் அரசு டவுன் பஸ்சை அழகன்குளத்தில் நிறுத்தி இயக்கப்படுவதால் மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.ஆற்றாங்கரையில் இருந்து பள்ளி செல்வதற்காகஅந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து டவுன் பஸ் 6- ஏ வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஆற்றாங்கரைக்கு காலை 8:15 மணிக்கு வந்து 8:20 க்கு புறப்பட்டு அழகன்குளம் செல்கிறது. இங்கு டிரைவர், கண்டக்டர்கள் சாப்பிடுவதற்காக டவுன் பஸ்சை நிறுத்துகின்றனர். மீண்டும் இங்கிருந்து பஸ்சை காலை 9:10 மணிக்கு இயக்குகின்றனர். இந்த பஸ்சில் பனைக்குளத்தில் படிக்கும் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கூட பஸ் ஸ்டாப்பில் இருந்து2 கி.மீ.,பள்ளிக்கு செல்வதால் உரிய நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அவசர அவசரமாக மாணவர்கள் பள்ளிக்கு புத்தகப்பைகளை சுமந்து செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ஒரிரு நாட்கள் பஸ்சை சரியாக இயக்குகின்றனர். அதன் பின் மீண்டும் தாமதமாக இயக்குவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ஆற்றாங்கரையிலிருந்து உரிய நேரத்தில் டவுன் பஸ் இயக்கி பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை