உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் கனமழை

ஆர்.எஸ்.மங்கலத்தில் கனமழை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்ததால் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, பூலாங்குடி, பிச்சனார்கோட்டை, நெடும்புளிக்கோட்டை, இருதயபுரம், மங்கலம், அத்தானுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது.இந்த மழை இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விளை நிலங்களில் மழையால் போதிய ஈரப்பதம் நிலவுவதால் கோடை உழவுக்கு ஏற்றதாக அமைவதுடன், ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை