உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பியால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இங்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது. கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பிகள் கடம்பன்குளம் முக்கு ரோட்டில் இருந்து மேலமானாங்கரை செல்லும் வரை உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாய பணிக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.கையால் தொடும் உயரத்தில் மின்கம்பி செல்வதால் கண்மாய் கரையில் நடந்து செல்லும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை