உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உள்ளூர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன்: பன்னீர்செல்வம் வாக்குறுதி

உள்ளூர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன்: பன்னீர்செல்வம் வாக்குறுதி

திருப்புல்லாணி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ. கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளூர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன் என தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் பன்னீர் செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினர் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பன்னீர்செல்வம் கோயில் வளாகத்தில் பசுமாட்டிற்கு வாழை பழம் வழங்கினார்.அதன்பிறக பஸ் ஸ்டாப் அருகே பன்னீர்செல்வம் பேசியதாவது; திருப்புல்லாணி யூனியனில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான பொது சுகாதார கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும்.பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகளும் அமைத்து தரப்படும். தடை இல்லாத மின்சாரமும் வழங்கப்படும். திருப்புல்லாணியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையன் சேர்வைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் ஆகியவற்றை எனது சொந்த பொறுப்பிலேயே கட்டித் தருவேன்.பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். உள்ளூர் பிரச்னைகளுக்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு பலாப்பழம் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.பின்னர் தினைக்குளம், குத்துக்கல்வலசை, வண்ணாங்குண்டு, பத்திராதிரவை, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மாலை நேரத்தில் உத்தரகோசமங்கை களரி, மேலமடை, புல்லந்தை, அலவாய்கரைவாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை