மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம் : கோட்டைக்கரை ஆறு, ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி பகுதியில் ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்தினர்.கோட்டைக்கரை ஆறு சிவகங்கை மாவட்டம் சருகணி மணிமுத்தாறு பகுதி முதல் கிழக்கு கடற்கரை சாலை உப்பூர் அருகே சேந்தனேந்தல் ஓடை வரை நீண்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தால் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சேந்தனேந்தல் ஓடை வழியாக உபரி நீர் கடலில் கலக்கிறது.இதனால் இந்த ஆற்றில் அதிகளவு மணல் படிந்து வருகிறது. அதே நேரத்தில் ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி உள்ளதால் மணல் திருட்டு கும்பலுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் கோட்டைக்கரை ஆறு, சனவேலி, கொக்கூரணி, மேலமடை, அழியாதான்மொழி, ஓடைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக, மணல் திருட்டு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தேர்தல் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததால் அதை சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டு கும்பல் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததால் ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago